தமிழக வரவுசெலவுத்திட்டத்திற்கு தொழில் துறையினரிடையே பலத்த வரவேற்பு

கோவை சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் ஆர்.ராமமூர்த்தி: பொருளியல் மந்த நிலையிலும், நாட்டின் மொத்த பொருளியல் வளர்ச்சியைக் காட்டிலும், தமிழகத்தில் பொருளியல் வளர்ச்சி அதிகரித்துள்ளது பாராட்டுக்குரியது. 2019-2020 ஆம் ஆண்டு தமிழக தொழில் துறைக்கான பொருளியல் வளர்ச்சி 7.27 விழுக்காடு. இது அகில இந்திய பொருளியல் வளர்ச்சியைக் காட்டிலும் கூடுதலாகும். தொழில் துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு, சிறு, குறுந்தொழில் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு, தொழில்முனைவோர் புத்தாக்கத் திட்டத்தின்கீழ் 500 புதிய நிறுவனங்கள் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரவேற்கத்தக்கவை.

இந்திய தொழில் வர்த்தக மன்றத்தின் கோவைத் தலைவர் வி.லட்சுமிநாராயணசாமி: வரியில்லா வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பித்தமைக்காக தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். தொழில், வேளாண்மை, சமூக வளர்ச்சிக்கான திட்டங்கள், முத்திரைக் கட்டண வரி குறைப்பு, தொழிலாளர் நலனுக்கான திட்டங்கள் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத் (டேக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ்: வட்டி மானியம், புதிய முனைவோருக்கான மானிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. அதேசமயம், ரூ.10 லட்சம் வரை முதலீட்டுக் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான மானிய உச்சவரம்பு அதிகரிப்பு, குறுந்தொழில்பேட்டை, மெட்ரோ திட்டங்களுக்கும் சிறு, குறுந் தொழில்களுக்கும் நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கின்றன.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் (காட்மா) தலைவர் சி.சிவக்குமார்: இயந்திர முதலீட்டு மானிய உச்சவரம்பு அதிகரிப்பு, சிறு, குறுந் தொழில்களுக்கான நிதி அதிகரிப்பு, வங்கிக் கடனுக்கான வட்டி மானியம் அதிகரிப்பு, திறன் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை. கோவை மாவட்டத்தில் கூடுதல் தொழிற்பேட்டைகள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்: சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளுக்கு 70% மானியம் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை. ஆனால், கோவையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைப்பது, உள்ளாட்சித் துறைகளுக்கான கொள்முதலை சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடமே செய்வது, மின் கட்டண மானியம், தொழில்முனைவோருக்கான சிறப்புக் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி: அத்திக்கடவு-அவிநாசி திட்டம், நொய்யல் நதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. ஆனால், நீண்டகால கோரிக்கையான பாண்டியாறு-புன்னம்புழா திட்டம், தமிழக அளவிலான நதி நீர் இணைப்புத் திட்டம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டங்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு, கால்நடை வளர்ப்புக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் எதுவுமே ஏற்கப்படவில்லை. இவை விவசாயிகளுக்கு வருத்தம் அளிக்கின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!