பள்ளிவாசல், தேவாலய ஆண்டுப் பராமரிப்பு நிதி ரூ.5 கோடியானது

பள்ளிவாசல், தேவாலய ஆண்டுப் பராமரிப்பு நிதி ரூ.5 கோடியானது

1 mins read

சென்னை: துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வரவுசெலவுத் திட்டத்தில், கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியானது ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்படும்.