விக்கிரவாண்டி கொலை வழக்கு; காவல்துறை ஆய்வாளர் மாற்றம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தலித் இளையர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கவனக்குறை வாக செயல்பட்டதாக காவல் நிலைய உதவி ஆய்வாளர்  பணிமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தைச் சோ்ந்த ராஜாராமின் மகன் சக்திவேல், 26, விக்கிரவாண்டி அருகே செ.புதூா் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவா் உயிரிழந்தாா். இது குறித்து பெரியதச்சூா் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்டதாக காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத்ராஜை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.