கோபத்தில் மனைவி கொலை; அனாதையான குழந்தைகள்

கடலூர்: கணவர் மனைவிக்குள் ஒருமித்த கருத்தொற்றுமை இல்லாமல் சந்தேகம் வலுத்ததால் மனைவியைக் கொன்றுவிட்டு தப்பியோடிய கணவர் கைதானார். அவர்களது இரு குழந்தைகளும்  அனாதையாகி உள்ள சம்பவம் காடாம்புலியூரில் நடந்துள்ளது.  

காதலர் தினத்தன்று  தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் வெளியே சென்றுவந்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி, தலையில் கல்லைப் போட்டு கணவர்  கொன் றுள்ளது போலிஸ் விசாரணையில்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேல், 27. கார் ஓட்டுநர். இவரது மனைவி ராஜேஸ் வரி, 25. இவர்களுக்கு  வர்ஷினி (6), ராகுல் (4) ஆகிய இரு குழந்தை கள் உள்ளனர். குமரவேல் பண்ருட்டி அன்வர்ஷா நகரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியேறினார்.

குமரவேல் இரவு நேரங்களிலும் சவாரிக்காக வெளியூர் சென்று விடுவார். அந்த சமயத்தில் ராஜேஸ் வரி கைபேசியில் சிலரிடம் பேசி வந்துள்ளார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் குழந்தைகளுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி யின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்றுள்ளார் குமரவேல். 

போலிசாரின் முதற்கட்ட விசா ரணை விவரம் வருமாறு:

“கார் ஓட்டுநரான குமரவேல் திருநங்கைகளுடன் தொடர்பு வைத்திருந்தார். அதேவேளையில் ‘டிக்-டாக்’ மோகத்தில் மூழ்கியிருந்த ராஜேஸ்வரி சில காணொளிகளை  எடுத்து ‘டிக்-டாக்’கில் பதிவிட் டுள்ளார். அத்துடன் வேறு சிலரிடம் கைபேசியில் பேசி வந்துள்ளார். இது குமரவேலுக்கு பிடிக்கவில்லை. அதேசமயம் குமரவேல், திருநங்கை களுடன் தொடர்பு வைத்திருந்ததை ராஜேஸ்வரியும் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.