பேரவையில் பழனிசாமி, துரைமுருகன் விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில்  பட்ஜெட் மீதான பொது விவாதம்  நேற்று தொடங்கியது. விவா தத்தின் இடையே ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான  திமுகவும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளவும் செய்தன. 

பட்ஜெட் விவாதத்தின்போது பல் வேறு பிரச்சினைகள் குறித்தும் குரல் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  தயாராக இருந்த நிலையில், திமுக உறுப்பினர் துரை முருகனுக்கும்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. 

மத்திய அரசில் அங்கம் வகிப்பது தொடர்பாக திமுக-அதிமுகவுக்கு இடையே வாக்குவாதம் கடுமையாக நடந்தது. 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக ஏன் தீர் மானம் எதுவும் நிறைவேற்றவில்லை என துரைமுருகன்  கேள்வி எழுப்பியதற்கு, முதல்வர் பழனிசாமி எதிர்கேள்வி எழுப்பினார். 

“அதிக எம்பிக்களை வைத்துள்ள திமுக, வேளாண் மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கித் தரலாமே? மூன்றாவது பெரிய கட்சி திமுக என்கிறீர்களே, நீங்கள் செய்யவேண்டியதுதானே?” எனக் கேட்டவர், “இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக் கள் குரல் கொடுக்கவேண்டும்,” எனவும் வலியுறுத்தினார். 

இதற்கு பதிலளித்த துரை முருகன், “நீங்கள் திட்டத்தை கொண்டு வருவீர்கள், ஆனால் நாங்கள் இதுகுறித்து நாடாளு மன்றத்தில் வலியுறுத்தவேண்டுமா?” என எதிர் கேள்வி எழுப்பினார். 

அத்துடன்,   நாங்கள் மத்திய அரசுடன் எதிரும் புதிருமாய் உள் ளோம், நீங்கள்தான் இணக்கமாய் உள்ளீர்கள் என்றார். 

தமிழக சட்டசபையில் கடந்த 14ஆம் தேதி 2020-2021ஆம்  ஆண் டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. துணை முதல்வரும்  நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். 

இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகர மான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், குடியுரிமை திருத் தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் பேராட்டத்தை திமுக தூண்டிவிட்டுள்ளது.  ஆனால் முதியவர் நோயின் காரணமாகவே இறந்துள்ளார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்து  திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.