நாகை: குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சில வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால், நாகையில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதில் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் குளத்து நீரில் மூழ்கின.
நாகபட்டிணத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அருகே சிலர் வீடு கட்டியுள்ளனர். நீர்நிலையை ஆக்கிரமித்து பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் எட்டு வீடுகள் திடீரென சரிந்தன.
வீடுகள் சரியப்போவதை உணர்ந்து அவற்றில் குடியிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
இதையடுத்து வீடுகள் கட்டப்பட்ட பகுதியில் பள்ளம் ஏற்பட்டு, நீர் வெளி யேறியது. வீட்டில் இருந்த பொருட்கள் நீரில் மூழ்கின.
அவற்றில் குடியிருந்தோர் உடனடியாக வெளி யேறியதால் உயிரிழப்பு ஏதுமில்லை.
தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். அருகில் உள்ள வீடுகளில் வசிப்போர் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்திச் சென்றனர்.
இச்சம்பவத்தால் நாகையில் பரபரப்பு நிலவி வருகிறது.

