சென்னை: புதுச்சேரியில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையத்தில் ரகசிய குறியீட்டை பதிவு செய்யும் கருவியைப் பொருத்திய செபஸ்டியன், 26, என்ற நைஜீரிய ஆடவரை சென்னையில் இணையக் குற்றச்செயல் ஒழிப்புப் போலிஸ் கைது செய்தது.
இதனிடையே, ஏடிஎம்மில் மற்றவர்களுக்குப் பணம் எடுத்து தருவது போல் நடித்து ஏமாற்றி வந்த தர்மபுரி செட்ரப்பட்டியைச் சேர்ந்த சிவலிங்கம், 43, என்பவர் கடைசியில் கையும்களவுமாகப் பிடிபட்டார். அவரிடம் ரூ. 2 லட்சம், போலி ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பலரையும் ஏமாற்றி இருக்கிறார் என்று நம்பப்படுவதால் தீவிர விசாரணை நடக்கிறது.

