முதலீடுகளை ஈர்க்க உதவும்படி உலக நாடுகளின் தூதர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: இந்தியாவில் பல துறைகளிலும் பெரும் சாதனைகளுடன் முதல் மாநிலமாகத் திகழும் தமிழகத்தை ஆசியாவிலேயே தொழில் நடத்த தலைசிறந்த இடமாக ஆக்குவதற்கு இடைவிடா முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

தமிழக அரசின் இந்த முயற்சிக்குப் பன்னாட்டுத் தூதர்களும் துணையாக இருந்து முதலீடுகளைக் கவர்ந்து உதவ வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளின் சங்கமம் மற்றும் தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த மாநாடு சென்னையில் நடந்தது.

அதில் ஆஸ்திரியா, ருமேனியா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, சுலோவேனியா, ஜிம்பாப்வே, நேப்பாளம், கைர்கிஸ் குடியரசு, பல்கேரியா, பெரு, டென்மார்க், ருவாண்டா, கானா, மலேசியா, இந்தோனீசியா உட்பட பல்வேறு நாடுகளின் தூதர்கள் கலந்துகொண்டனர்.

சென்னையில் உள்ள, அமெரிக்கா, இலங்கை, பிரிட்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், தென் கொரியத் தூதர்களும் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், முதலீட்டு வாய்ப்புகளைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதைச் சுட்டினார்.

பன்னாட்டு முதலீடுகளைக் கவரும் வகையில் ஜப்பான், ஜெர்மனி நாடுகளுடன் கூட்டு பணிக்குழுக்களை அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

பிரான்ஸ், அமெரிக்கா, தென் கொரியா தூதரகங்களுடன் சேர்ந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட முதல்வர், மாநிலத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வாய்ப்புகள் மண்டிக் கிடப்பதாகத் தெரிவித்தார்.

தூதர்கள் தங்கள் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் இணைப்புப் பாலமாகத் திகழ்ந்து வெளிநாட்டு முதலீடுகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வர உதவ வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் மூன்று பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வுக் குறிப்பில் தமிழக அரசு கையெழுத்திட்டது. அதன்படி ரூ. 1,255 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் தொடங்கிவைத்தார்.

ஜப்பானின் மிட்சுபா சிகால், தென்கொரியாவின் ஹானான் ஆட்டோமோட்டிவ், அமெரிக்காவின் ஜோகோ ஹெல்த் நிறுவனம் ஆகியவை தமிழகத்தில் செய்துள்ள முதலீடுகளின் மூலம் 10,330 பேருக்கு வேலை கிடைக்கும் என்றார் முதல்வர்.

அதோடு, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 217 கோடி மதிப்பிலான தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்கா திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இந்தத் திட்டம் ரூ. 3,000 கோடி முதலீட்டை ஈர்த்து 7,000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றார் அவர்.

இவற்றோடு சென்னை, பெங்களூரு தொழில்துறை வளாகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் அதிநவீன தொழில் நகரம் ஒன்றை அமைக்கவும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!