கடலூர், நாகை பெட்ரோலிய மண்டல ஆணை ரத்தானது

கடலூர், நாகை பெட்ரோலிய மண்டல ஆணை ரத்தானது

1 mins read
971ac546-9782-4ab4-a4a6-79373e701b66
-

சென்னை: கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையைத் தமிழக அரசு ரத்து செய்து சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் அரசிதழில் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

முன்னதாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இதனையொட்டி பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான அரசாணை ரத்தானது.