தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின்போது தொடங்கிய ஜல்லிக்கட்டின் வீரமும் வேகமும் இன்னமும் குறைந்தபாடில்லை.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிங்கராயபுரம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேட்டு இருங்களூர், தஞ்சாவூர் மாதாகோட்டை ஆகிய இடங்களில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆயிரக்கணக்கான காளைகளும் வீரர்களும் களத்தில் குதித்தனர்.
கோயம்புத்தூர் செட்டிப்பாளை யத்தில் இன்று 900 காளைகள், 600 வீரர்கள் களமிறங்கும் ஜல்லிக்கட்டு நடக்கிறது.

