மதுரை கைதிகளின் இறைச்சிக் கடையில் அலைமோதும் கூட்டம்

மதுரை: தமிழகத்தில் மிகவும் பெரியதான மதுரை மத்திய சிறை வளாகத்தில் புதிதாக இறைச்சிக் கடை திறக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கைதிகள் மட்டுமே நடத்தி வரும் இந்தக் கடையில் ஆட்டு இறைச்சி மலிவான விலையில் விற்கப்படுகிறது.

மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவிக்கும் 1,000 பேருக்கும் மேற்பட்ட கைதிகளில் பலருக்கும் சிறுதொழில் பயிற்சிகள்  கற்றுத் தரப்படுகின்றன. 

கைதிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக அந்த வளாகத்தில்  ‘சிறைச்சாலை கடைத்தெரு’ திறக்கப்பட்டு பல கடைகள் குறைந்த விலையில்  தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்று வருகின்றன.

இப்போது அந்த வளாகத்தில் புதிதாக இறைச்சிக் கடை திறக்கப்பட்டுள்ளது. 

ஆட்டை உரிப்பது, உடல், கால், தலையைத் தீயில் வாட்டுவது உள்ளிட்ட பணிகளில் 15 கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  20% குறைந்த விலையில் இறைச்சி விற்கப்படுவதால் கூட்டம் அலைமோதுவதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.