தூங்கி வழிந்த அதிகாரி: இணையவாசிகள் கடும் விமர்சனம்

சென்னை: அரசு விழாவில் அமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது, அதிகாரி ஒருவர் தூங்கி வழியும் காட்சியுடன் கூடிய காணொளிப் பதிவு ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா. 

அப்போது  சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் என தவறுதலாக குறிப்பிட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்நிகழ்வில் பங்கேற்று மேடையில் அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் தூங்கி வழிவதும், அவரை அருகில் உள்ளவர் தட்டி எழுப்பும் காட்சியும் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதையடுத்து அமைச்சரை யும் அதிகாரியையும் இணையவாசிகள் பலவிதமாக விமர்சித்து பின்னூட்டமிட்டு வருகின்றனர்.