பல கோடி மோசடி செய்த கும்பல் கைது

சென்னை: வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த கும்பலை சென்னை போலிசார் கைது செய்துள்ளனர். இக்கும்பல் பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மேலும் பல மாநிலங்களில் இதுபோல் கைவரிசை காட்டியுள்ளது. கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவான நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.