இணையம் வழி ஆபாசப் படம் பார்த்த 600 பேர் மீது நடவடிக்கை உறுதி

சென்னை: இணையம் வழி சிறுவர், சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பார்த்த 600 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இவர்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு போலிசார் சேகரித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் ஏற்கெனவே 2 பேர் கைதாகியுள்ள நிலையில், இந்தக் கைது நடவடிக்கையைப் போலிசார் தீவிரமாக மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.