காதலி மரணம்: காதலன் வெட்டிக் கொலை

புதுவை: காதலி உயிரை மாய்த்துக் கொண்டதை அடுத்து அஞ்சலி செலுத்த வந்த காதலன் படுகொலை செய்யப்பட்டார்.

புதுவையைச் சேர்ந்த அருணாவும், 22 வயதான ராகவனும் காதலித்துள்ளனர். இதற்கு அருணாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதையறிந்த ராகவன் வெளியூரில் இருந்து காதலிக்கு அஞ்சலி செலுத்த வந்தார். இந்நிலையில் மர்மக் கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்று வெட்டிக் கொன்றது.