திமுக எம்எல்ஏக்கள் உயிரிழப்பு; மனமுடைந்து போன ஸ்டாலின்

சென்னை: கடந்த இரண்டு நாட்களில் இரு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரணம் அடைந் துள்ள நிலையில், பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடமாக கோமா நிலையில் இருப்பதும் திமுக தலைவர் ஸ்டாலினை மட்டு மல்லாது ஒட்டுமொத்த திமுகவையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  நேற்று முன்தினம் பிப்ரவரி 27ஆம் தேதி திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ வுமான கே.பி.பி.சாமி உடல்நலக் குறைவால் மரணமடைந்த நிலையில் நேற்று மற்றொரு திமுக எம்எல்ஏ வான காத்தவராயன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

தொடர்ந்து அடுத்தடுத்து இரு எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளதால் தற்பொழுது சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் எண் ணிக்கை 98ஆக குறைந்துள்ளது. 

இந்நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று 29ஆம் தேதி நடைபெற இருந்த திமுக எம்பிக்களின்  கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “கே.பி.பி.சாமியையும் காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்கு பேரி ழப்பு. இந்த துயரமிகுந்த தருணத்தில் அவரை இழந்து வாடும் குடும் பத்தினருக்கும் கழக உடன்பிறப்பு களுக்கும் எனது ஆழ்ந்த இரங்க லையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

“மார்ச் 1ஆம் தேதி எனது பிறந்த நாளைக் கொண்டாடும் மனநிலை யிலும் நான் இல்லை. அன்றைய தினம் யாரும் வாழ்த்துச் சொல்ல வேண்டாம்,” என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் திமுக தொண் டர்கள் சிலர், சமூக வலைத்தளப் பக்கங்களில் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு ஆலோசனை கொடுக்க வந்தது முதலே திமுகவுக்கு நேரம் சரியில்லை என்றும் அவரைக்           கழற்றி விட்டுவிடுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.