கொலை வழக்கு: 16 பேருக்கு ஆயுள் தண்டனை

1 mins read

சிவகங்கை: கொலை வழக்கின் தொடர்பில் குற்றவாளிகள் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித் ததை அடுத்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச் சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அல்லிமுத்து என்பவர் ஆட்டுக்கிடை அமைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அல்லிமுத்துக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 2010ஆம் ஆண்டு அல்லிமுத்து படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கின் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. அவர்களில் சேகர், கருப்பையா இறந்துவிட்டனர்.

இந்நிலையில் இதர குற்றவாளி கள் 16 பேருக்கும் ஆயுள் தண்டனை யும் 8,000 ரூபாய் அபராதமும் விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.