ஆடவர் வாக்குமூலம்: பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவே சிறுமியைக் கடத்தினோம்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் நள்ளிரவு நேரத்தில் சினிமாவை மிஞ்சும் வகையில் ஒரு சிறுமியைக் கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.   

விசாரணையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக சிறுமியைக் கடத்திச்சென்றதாக குற்றவாளிகள் கூறியுள்ளனர். 

இந்தக் கும்பலை சிறுமியின்   சகோதரன் மடக்கிப்பிடித்து, சிறு மியை மீட்டுள்ள சம்பவம் பெண் குழந்தைகளை வைத்துள்ள  பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. 

சென்னை வில்லிவாக்கம் பகுதி யைச் சேர்ந்தவர் விஜய், (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  டாடா மேஜிக் வாகன ஓட்டுநரான இவர் நள்ளிரவில் கோயம்பேடு பகுதியில் சவாரிக்காகச் சென்றுள்ளார். 

அப்போது ஒரு காரில் இரண்டு நபர்களோடு ஒரு சிறுமி இருப்பதைப் பார்த்துள்ளார். 

சற்றே  உற்றுப்   பார்த்தபோது தான் அந்த சிறுமி தனது 14 வயது தங்கை என்பது விஜய்க்கு தெரிய வந்தது. தங்கையைக் கண்டு அதிர்ந்தவர், அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளார்.

ஆனால், அதற்குள் கார் புறப் பட்டு விடவே தனது வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரை வழி          மறித்து, சிறுமியை மீட்டு, அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். 

அப்போது போலிசார் ரோந்து வருவதை அறிந்ததும் காரில் இருந்த இரு நபர்களில் ஒருவரான ஃபாசில் தப்பியோடினார். 

இதையடுத்து மற்றொரு நபரான பிரகாஷை போலிசார் விசாரணைக் காக அழைத்துச்சென்றுள்ளனர். 

விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பிரகாஷ், ஃபாசில் ஆகிய இருவரும் சிறுமியைக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பிரகாஷின் காரில் இருந்து பட்டாக்கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.