தில்லுமுல்லுகளைத் தடுக்க பத்திரப் பதிவு முறை மாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் ஊழல், தில்லுமுல்லு, மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்தில் பத்திரங்களைப் பதியும் முறையில் அதிரடியாக பல மாற்றங்கள் நடப்புக்கு வந்துள்ளன.

புதிய நிபந்தனைகளின்படி, இனிசார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர எழுத்தர்களும் நிலத்தரகர்களும் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல, போலி ஆவணங்களைக் கொண்டு பத்திரப்பதிவு நடப்பதைத் தடுப்பதற்காக நான்கு தாலுக்காக்களில் புதிய நடைமுறை நடப்புக்கு வருகிறது.

மாநிலத்தில் பத்திரப்பதிவுத் துறையில்தான் லஞ்சமும் ஊழலும் அதிகமாக தலைவிரித்தாடுவதாகக் கூறப்படுகிறது.

பத்திர எழுத்தர்களுக்கு எதிரான புகார்கள் பதிவுத் துறைக்கு வந்தபடியே இருக்கின்றன என்று அந்தத் துறையின் தலைவர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்து வருகிறார்.

புதிய மாற்றங்கள் பற்றி விளக்கிய அவர், இனிமேல் பத்திர எழுத்தர்கள், பத்திரங்கள் தயாரிப்பதற்கான கட்டண ரசீதைப் பொதுமக்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்று கூறினார்.

அந்த ரசீதுடன் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதை பதிவு அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்குப் பிறகே பத்திரப் பதிவுகள் நடக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்து இருக்கிறார்.

பொது மக்களுக்கு எழுத்தர்கள் கொடுக்கும் அந்த ரசீது நகலை அந்தந்த பத்திரங்களுடன் சேர்த்து பதிவு அலுவலர்கள் கோப்பில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சோழகிரி ஆகிய தாலுக்காக்களிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் தாலுக்காக்களிலும் சோதனை அடிப்படையில் புதிய ஏற்பாடுகள் நடப்புக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி நிலப் பரிவர்த்தனைக்கான பதிவுக்கு முன் நில உரிமையாளர்கள் இணையம் வழி பட்டா பெறவில்லை என்றால், அவர்கள் புதிய அங்கீகார நகல் ஒன்றைப் பெற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அவர்களுக்கு அந்த நகல் கிடைக்கும் என்று அரசாணை குறிப்பிட்டது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் பத்திரப் பதிவுத் துறையில் லஞ்ச ஊழலைக் குறைக்கும் என்றும் தில்லுமுல்லு, மோசடிகளைத் தவிர்த்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாகக் காணப்படும் துறைகளில் பத்திரப் பதிவுத் துறையே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதிகாரிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அந்தத் துறையில் வேலையே நடப்பதில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில் பத்திரப் பதிவுத்துறையில் புதிய நிபந்தனைகளும் புதிய ஏற்பாடுகளும் நடப்புக்கு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!