மாணவிகளை மதுவுக்கு பழக்கியவர் கைது

மாணவிகளை மதுவுக்கு பழக்கியவர் கைது

1 mins read

தென்காசி: பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து மது வாங்கிக் கொடுத்த வாடகைக் கார் ஓட்டுநர் கைதானார். 32 வயதான சேதுராஜ் என்ற அந்த ஆடவர், 11ஆம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகளுக்கு இவ்வாறு மது வாங்கிக் கொடுத்துள்ளார். மாணவியின் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவந்தது. நேற்று முன்தினம் அவர் மாணவிகளை தன் காரில் ஏற்றிக் கொண்டு மது வாங்க சென்ற போது மாணவிகளின் பெற்றோரிடம் சிக்கினார்.