காட்பாடி: கசம் கண்டிப்பேடு பகுதியில் இயங்கி வரும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் குடும்பத்துக்குச் சொந்தமான அருவி என்ற குடிநீர் நிறுவனத்தில் போர்ஆழ்துளைக் குழாய் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிறுவனம் கதிர்ஆனந்தின் மனைவி சங்கீதா பெயரில் செயல்பட்டு வருகிறது.
கதிர்ஆனந்த் எம்.பி. குடும்பத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனம் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 17 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் இருந்து குடிநீர் போர்வெல் மூலம் உறிஞ்சி விற்பனை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் 37 குடிநீர் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

