நாசாவுக்கு செல்ல வாய்ப்பு; தமிழக அரசின் உதவி கோரும் மாணவர்

நாசாவுக்கு செல்ல வாய்ப்பு; தமிழக அரசின் உதவி கோரும் மாணவர்

1 mins read
b1e5585a-d61a-43d2-ac5b-5423e4819e36
விருதுநகரில் உள்ள காமராஜர் பொறியியல்  கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வரும் சங்கர் வினோத். படம்: ஊடகம் -

விருதுநகர்: நாசாவிண் வெளி மையத்திற்குச் செல்வதற்கு வாய்ப்பு கிடைத் தும் போதுமான பண வசதியின்றி பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தவித்து வருகிறார்.

மதுரை மாவட்டம், செல்லூரைச் சேர்ந்தவர் சங்கர் வினோத், 21. விருதுநகரில் உள்ள காமராஜர் பொறியியல் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

தனக்கு கிடைத்துள்ள நாசா வாய்ப்பு குறித்து சங்கர் வினோத் கூறுகையில், "வங்கியில் தினக்கூலி அடிப்படை யில் அலுவலக உதவியாளராக என் தந்தை பணிபுரிகிறார். 'கோ பார் குரு' என்ற இணைய அறிவியல் தேர்வில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளேன். உலக அளவில் நடக்கும் போட்டி அமெரிக்காவில் உள்ள 'நாசா' விண்வெளி மையத்தில் ஜூன் இறுதியில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.அங்கு சென்றுவர 1.79 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகிறது.

"மார்ச் 10க்குள் நுழைவுக் கட்டணம் ரூ.30,000 கட்ட வேண்டியுள்ளது. அதற்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி கிடைத்தால் கண்டிப்பாக வெற்றிபெற்று, நம் இந்திய நாட்டிற்கு பெருமைசேர்ப்பேன்," என்று கூறியுள்ளார்.