கடலில் வீசிய 17 கிலோ தங்கம் பறிமுதல்; இரு வாலிபர்கள் கைது

கடலில் வீசிய 17 கிலோ தங்கம் பறிமுதல்; இரு வாலிபர்கள் கைது

2 mins read
a0a6a4e6-73ce-4c31-8f56-a9ea90e1cb94
இலங்கையில் இருந்து தமிழகத்தின் மண்டபம் பகுதிக்குக் கடத்தி வரப்பட்டு கடலுக்குள் வீசப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. படம்: ஊடகம் -

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதிக்கு இலங்கையில் இருந்து படகில் 17 கிலோ தங்கத்தை கடத்தி வந்த இரு வாலிபர்கள், போலிசைக் கண்டதும் அதைக் கடலில் வீசி விட்டு தப்பிக்க முயன்ற நிலையில், அவர்கள் போலிஸ் பிடியில் சிக்கினர்.

இரு வாலிபர்கள் கடத்தி வந்த ரூ.7 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இரு வாலி பர்களையும் கைது செய்தனா்.

இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள் மூவர், கடலில் குதித்து ஆறு கறுப்பு நிற பார்சல்களை எடுத்துவந்தனர். அவற்றின் உள்ளே நிறைய தங்கக்கட்டிகள் இருந்தன.

அவற்றை இந்திய கடலோரக் காவல்படை நிலையத்துக்கு கொண்டுவந்து, எடை போட்டுப் பார்த்தபோது மொத்தம் 17 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன.

இதன் அனைத்துலக மதிப்பு ரூ.7 கோடி என்றும் கூறப்படுகிறது.

கடந்த 5 வருடத்துக்கு பிறகு இவ்வளவு அதிகமான கடத்தல் தங்கம் ராமேசுவரம் பகுதியில் பிடி பட்டிருப்பது இதுவே முதல்முறை.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசு வரத்துக்கு படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதி காரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வந்த படகு ஒன்றை முயல் தீவு அருகே மறித்தனா்.

படகில் இருந்த இருவரையும் மண்டபத்தில் உள்ள கடலோரக் காவல் படை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா்.

அவா்களிடம் நடத்திய விசா ரணையில், மரைக்காயா் பட்டணத் தைச் சோ்ந்த ஆஷீக், 22, அதே பகுதியைச் சோ்ந்த பாரூக், 22, என்பது தெரியவந்தது.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை இவா்கள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது பிடிபட்டதாக தெரிவித்தனர்.

அத்துடன் அதிகாரிகளைக் கண்டதும் தங்கத்தை முயல்தீவு அருகே கடலில் வீசி எறிந்த இடத்தை ஜிபிஎஸ் கருவியில் குறித்து வைத்திருந்தனா்.

இதையடுத்து கடலோரக் காவல் படையினரும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் முயல் தீவு பகுதிக்குச் சென்று முக்குளிப்பாளர்களின் உதவியுடன் கடலில் இறங்கித் தேடினா்.

அப்போது பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டிருந்த ஆறு பாா்சல்களைக் கைப்பற்றினா். இதில் ரூ.7 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி னா். தீவிர விசாரணைக்குப் பின்னர் தான் அவர்கள் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் அந்த தங்கக்கட்டிகளை கடலோரக் காவல் படையினர் துரத்தியதைத் தொடர்ந்து கடலில் குறிப் பிட்ட ஓர் இடத்தில் வீசி விட்டதாகவும் தெரிவித்தனர்.

இதேபோல கடந்த மாதம் 15ஆம் தேதி இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேசுவரத்துக்கு கடத்தி வரப்பட்ட 3½ கிலோ தங்கக் கட்டி களுடன் இலங்கையைச் சேர்ந்த மூவர் உள்பட எழுவர் கைது செய்யப்பட்டனர்.