சென்னை: வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக்கூறி மாணவரை இரும்பு அளவு கோல் (ஸ்கேல்) மூலம் ஆசிரியர் தாக்கியதில் பார்வை பாதிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் அடுத்த இரு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவரைத் தாக்கிய ஆசிரி யர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ள மாணவ னுக்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடு எதுவும் வழங்கப்பட் டுள்ளதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் இயக்குநரும் இரு வாரத் துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த மாணவர் கார்த்திக், 13, மேடவாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதால் மாணவர் கார்த்திக்கை தமிழ் ஆசிரியர் இரும்பு அளவுகோல் மூலம் தலையின் பின்பகுதியில் அடித்ததில் அவரது இடது கண் பார்வை பறிபோனது. பாதிக்கப்பட்டுள்ளது.

