சென்னை: தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது.
முதற்கட்டமாக இம்மாவட்டங்க ளில் வார்டு வரையறை தொடர்பான பணிகள் முடிந்திருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவு காரணமாக அம்மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.
தற்போது வார்டு வரையறை பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் 9 மாவட்ட ஆட்சியர்களுடன் மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முடிவில் எப்போது தேர்தலை நடத்துவது என்பது முடிவாகும் எனத் தெரிகிறது.
கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது என்றும், அதை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் புதிதாக உருவான 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை விட திமுக கூடுதலாக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே ஒன்பது மாவட்டங்க

