சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திமுக பலமுறை தமிழில் விளக்கங்கள் அளித்துள்ளதாகவும், முதல்வர் பழனிசாமிக்கு அந்தப் பதில்கள் புரியவில்லை போலும் என திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். எனவே இனி முதல்வரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்பது என முடிவு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? என அண்மையில் முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் திமுகவிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இனி முதல்வருக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்கப் போவதாக திமுக அறிவிப்பு
1 mins read

