உசிலம்பட்டி: இரண்டாவதாக பிறந்த குழந்தையும் பெண் குழந்தை யாகப் பிறந்ததால் அந்தக் குழந் தையை மேலும் வளர்த்து ஆளாக்க விரும்பாத தாயும் தந்தையுமே குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத் துக் கொன்றுள்ளது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஒரு மாதமே ஆன பெண் குழந்தையைக் கொன்று புதைத்த பெற்றோா் உள்பட மூவரை போலி சார் கைது செய்தனா்.
குழந்தையின் பெற்றோா் வைர முருகன், செளமியாவிடம் நடத்தப் பட்ட விசாரணையில் குழந்தையை அவர்களே கொலை செய்து புதைத் ததும் இதற்கு வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவன் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து மூவரும் கைதாகினர்.
இச்சம்பவம் மூலம் தமிழகத்தில் மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகேயுள்ள புள்ள நேரி மீனாட்சிபட்டியைச் சோ்ந்தவா் வைரமுருகன். இவரது மனைவி செளமியா. இவா்களுக்கு ஏற்கெ னவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் செளமியாவுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி இரண் டாவது பெண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடா்ந்து இக்குழந்தை உடல்நலக்குறைவால் இறந்ததாகக் கூறி மாா்ச் 2ல் குழந்தையின் சட லத்தை பெற்றோா் புதைத்துள்ளனா்.
இது தொடா்பாக சந்தேகமடைந்த அப்பகுதி மக்களும் கிராம நிா்வாக அதிகாரி மந்தக்காளையும் செக்கா னூரணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனர்.
இதையடுத்து, குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தியதில் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் ஏற்கெனவே வறுமையில் வாடும் தங்களால் பெண் குழந் தையை வளர்க்கமுடியாது எனக் கருதி எருக்கம்பால் கொடுத்து கொன்றதாக பெற்றோர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவரது ஃபேஸ்புக் பக்கப் பதிவில், "தமிழகத்தின் பண் பாட்டுப் பெருமைக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் பெண் சிசுக் கொலை சம்பவம் தலைதூக்கி உள்ளது வேதனை அளிக்கிறது. பெண்குழந்தை யைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது," என்று குறிப் பிட்டுள்ளார்.

