புதுக்கோட்டை: பரோட்டா சாப்பிடு வதை தவிர்த்துவிட்டு அதற்குப் பதில் பால், பழம், கடலை மிட்டாய் போன்ற எளிதில் செரிமானமாகும் வகையிலான உணவுகளை மட்டுமே பேருந்து ஓட்டுநர்கள் உண்ணவேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக கும்ப கோணம் மண்டல மேலாண்மை இயக்குநர் ஆர்.பொன்முடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற அவர் சிறந்த ஓட்டுநர்கள் 9 பேரைப் பாராட்டிப் பேசியபோது, "பரோட்டா சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இதற்கு பதிலாக எளிதில் செரிமானமாகும் பால், வாழைப்பழம், கடலை மிட்டாய் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பேருந்து ஓட்டும்போது இதை அவசியம் கடைப்பிடியுங்கள்.
"உணவுப் பழக்கத்தில் ஓட்டுநர் கள் அக்கறை காட்டவேண்டும். நம் மண்ணில் விளையும் நிலக்கட லையைப் பயன்படுத்தி தயாரிக்கப் படும் கடலை மிட்டாயின் அருமை நமக்குத் தெரியவில்லை. ஆனால், நம் நாட்டில் தயாராகி ஏற்றுமதியாகும் கடலை மிட்டாயை அமெரிக் கர்கள் விரும்பி உண்கிறார்கள்.
"முடியாதது எதுவும் கிடையாது. அனைவரும் முயற்சி செய்தால் விபத்தில்லாத சிறந்த ஓட்டுநராக முடியும். ஓட்டுநர்கள் ஒவ்வொரு வரும் உடலையும் உள்ளத்தையும் நன்றாக கவனித்துக்கொண்டால் விபத்துகளைக் குறைக்கமுடியும்," என்று அறிவுறுத்தினார்.

