ஆட்டோ ஓட்டுநர் கலைஞருக்கு குவிகிறது பாராட்டு

ஆட்டோ ஓட்டுநர் கலைஞருக்கு குவிகிறது பாராட்டு

1 mins read
8ef193a1-9c86-4630-a2f8-af4cb032122d
-

காரைக்குடி: அடுத்தடுத்து இரு முறைகளாகத் தொடர்ந்து பணத்தின் மீது ஆசை கொள்ளாமல் கண்டெடுத்த பணத்தைத் திருப்பிக்கொடுத்து நேர்மையான மனிதராக நடந்துகொள்ளும் ஆட்டோ ஒட்டுநர் கலைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காரைக்குடி முத்துராமலிங்கத் தேவர் தெருவைச் சேர்ந்தவர் கலைஞர், 40. இவரும் இவரது மூன்று சகோதரர்களும் ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரிகின்றனர்.

புதிய பேருந்து நிலையம் பகுதி யில் ஆட்டோ ஓட்டி வரும் கலைஞரின் ஆட்டோவில் நேற்று முன்தினம் மாலை 22 வயது இளைஞர் காரைக்குடியில் இருந்து கண்டனூருக்குச் சென்றார்.

அந்த இளைஞரை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் மற்றொரு பயணியை ஆட்டோவில் ஏற்றிய போது ஆட்டோவில் ஒரு பை இருந்தது. அதில் ரூ.13,500, ஏடிஎம் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை இருந்தன. ஆனால் கைபேசி எண் மட்டும் இல்லாததால் பணப்பையை உரியவரிடம் ஒப்ப டைக்குமாறு காரைக்குடி வடக்கு போலிசாரிடம் ஆட்டோ ஓட்டுநர் கலைஞர் ஒப்படைத்தார்.

வாக்காளர் அட்டை மூலம் கண்டனூரைச் சேர்ந்த சுந்தர் ஹரிகரன் என்பது தெரியவந்தது.

இதேபோல் 2009ஆம் ஆண்டு காரைக்குடி அரசு மருத்துவமனை தாதியர் ஒருவர் தேவர் சிலை அருகே தனது கைப்பையைத் தவறவிட்டார். அதில் ரூ.1.5 லட்சம் பணமும் முக்கிய ஆவணங்களும் இருந்தன. அதைக் கலைஞர் போலி சாரிடம் ஒப்படைத்தார். இப்படி ஒவ்வொரு முறையும் நேர்மையாக நடந்துகொள்ளும் கலைஞரை மக்கள் பலரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.