அரசாங்க கட்டடம் இடிந்தது; அமைச்சர் ராஜு தப்பினார்

அரசாங்க கட்டடம் இடிந்தது; அமைச்சர் ராஜு தப்பினார்

1 mins read
387b323d-8068-4db9-9687-f6bf439a3dd8
தரை உடைந்து விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய அமைச்சரைப் பாதுகாப்பாக மீட்கிறார்கள். படம்: தமிழக ஊடகம் -

மதுரை: மதுரை செல்லூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள ரவுண்டானா கட்டடத் திறப்பு விழாவின்போது கபடி வீரர்களை நினைவுகூரும் வகையில் ஒரு சின்னம் அமைக்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

அந்தத் திட்டம் தொடர்பில் நேற்று அமைச்சர் செல்லூர் ராஜு அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினார். ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அந்த ரவுண்டானா கட்டடத்தின் மேற்பகுதியில் நின்று மக்களிடம் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தரைக்கற்கள் உடைந்து 5 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டு அந்தப் பள்ளத்தில் அமைச்சர் சரிந்துவிட்டார்.

போலிசாரும் தொண்டர்களும் அமைச்சரைப் பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சியைப் பாதியில் ரத்து செய்துவிட்டு அமைச்சர் சென்றுவிட்டார். கட்டிக்கொண்டு இருக்கும்போதே அரசாங்கக் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் பெரும் பிரச்சினையைக் கிளப்பி உள்ளது.