தஞ்சையில் களவு போன 22 சாமி சிலைகள் மீட்பு; நால்வர் கைது

தஞ்சையில் களவு போன 22 சாமி சிலைகள் மீட்பு; நால்வர் கைது

1 mins read
278936a2-ebb5-426f-af30-8b90bb7b5477
தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான ஜெயின் கோவிலில் திருடப்பட்ட 22 சாமி சிலைகளைத் திருட்டு நடந்த 48 நாட்களில் போலிசார் மீட்டுள்ளனர். படம்: ஊடகம் -

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான ஜெயின் கோவிலில் திருடப்பட்ட 22 சாமி சிலைகளைத் திருட்டு நடந்த 48 நாட்களில் போலிசார் மீட்டுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் சம் பந்தப்பட்ட நால்வர் கைதாகினர்.

தஞ்சை, கரந்தை புதுக்குளம் ஜைனமுதலி தெருவில் புகழ்பெற்ற ஆதீஸ்வரர் கோவில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் சமணர் கோவிலாகும்.

கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி இரவு திருடர்கள் கோவிலில் இருந்த ஆதீஸ்வரர், தீர்த்தங்கரர், சரஸ்வதி, ஜோலமாலினி, சரவண யாக்சன், பஞ்சமேரு, மகாவீரர், தார்நேதயாஸ்கன், நந்தீஸ்வரர், நவக் கிரக தீர்த்தங்கள், நவதேவதை உள்ளிட்ட 22 சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த புகார் தொடர்பாக போலிசார் தனிப்படை அமைத்து சிலை திருடர்களைத் தேடிவந்தனர். தஞ்சை, சுங்கான் திடலைச் சேர்ந்த ராஜேஷ், 40, என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி கரந்தையைச் சேர்ந்த சண்முகராஜன், 45, சுங்கான் திடலைச் சேர்ந்த ரவி, 45, நாகை, கீவளூரைச் சேர்ந்த விஜயகோபால், 37, ஆகியோரை போலி சார் நேற்று கைது செய்தனர். ராஜேஷ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 சிலைகளையும் போலிசார் மீட்டனர்.