வகை வகையாக 65 வகை பிரியாணி

வகை வகையாக 65 வகை பிரியாணி

1 mins read

சேலம்: சேலத்தில் செயல்படும் தனியார் கல்லூரி ஒன்று, மாணவர்கள் பிரியாணி தயா ரிக்கும் போட்டியை நடத்தி யது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் தயா ரித்த பிரியாணியை சுவைத் துப் பார்த்த மாணவிகள் மாணவர்களுக்கு வாழ்த்து களையும் கூறினர்.

போட்டியில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டி நாடு பிரியாணி என 65 வகை பிரியாணிகளை விதவிதமாக சமைத்தனர்.

சைவர்களுக்குப் பிரத்யேகமாக சைவ பிரியாணியையும் மாண வர்கள் தயாரித்தனர்.

தக்காளி, வெங்காயம், தயிர் உள்ளிட்டவற்றைக் கொண்டு 65 வகையான பிரியாணிகளையும் மாணவர்கள் அலங்கரித்து காட்சிப்படுத்தியதைப் பார்த்த பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் நடுவர் ஒவ்வொரு பிரியாணியையும் சுவைத்துப் பார்த்து அதற்கு மதிப்பெண் கொடுத்தார். இதில் சிறப்பாக பிரியாணி சமைத்த இளைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.