சாலை விபத்தில் குறைவான உயிரிழப்பு: தமிழகம் முதலிடம்

சாலை விபத்தில் குறைவான உயிரிழப்பு: தமிழகம் முதலிடம்

1 mins read
ace35a7f-2d08-4be7-835c-7bb21191a212
கோப்புப்படம்: இணையம் -

புதுடெல்லி: சாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவான மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 39% அளவிற்கு இறப்புகள் குறைந்துள்ள தாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், சாலை விபத்துகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10,317 உயிரிழப்புகள் குறைந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 39% அளவிற்கு இறப்புகள் குறைந்துள்ளன. அதாவது, 17,218 ஆக இருந்த உயிரிழப்புகள் 2019ல் 10,525 ஆக குறைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.