பொன்னையனுக்கு அரசு பதவி

பொன்னையனுக்கு அரசு பதவி

1 mins read
275dac50-4975-4766-bed6-f78d1a57e764
தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின்  துணைத்தலைவராக முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார். கோப்புப்படம்: இணையம் -

சென்னை: 1971ல் துவக்கப்பட்ட தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவராக முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில், இக்குழுவின் துணைத் தலைவராக முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன், 78, நியமிக்கப்பட்டு உள்ளார். அதிமுக அமைப்பு செயலராக, செய்தி தொடர்பாளராக உள்ள பொன்னையன், நான்கு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். 2001ல் ஜெயலலிதா அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்துள்ளார்.