ஆதரவற்ற சடலங்களுக்கு ஈமச்சடங்கு நடத்தும் பெண்ணுக்கு ஒளவையார் விருது

ஆதரவற்ற சடலங்களுக்கு ஈமச்சடங்கு நடத்தும் பெண்ணுக்கு ஒளவையார் விருது

1 mins read
1c7f1ced-fdca-4615-acc7-b0af34c15ea3
ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச்சடங்குகளை நடத்தி, சமூகத்துக்கு தன்னால் இயன்ற அளவுக்கு பெரும் பங்காற்றி வரும் கண்ணகி என்ற பெண்ணுக்கு ஔவையார் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கோப்புப்படம்: இணையம் -

சென்னை: ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச்சடங்குகளை நடத்தி, சமூகத்துக்கு தன்னால் இயன்ற அளவுக்கு பெரும் பங்காற்றி வரும் கண்ணகி என்ற பெண்ணுக்கு ஔவையார் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பெண்களில் ஒருவரை தேர்ந்தெ டுத்து அவருக்கு அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி 'ஔவை யார் விருது' என்ற உயரிய விருதை வழங்கி பாராட்டி வருகின்றனர்.

இந்த விருது பெறுபவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2012ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், இந்த 2020ஆம் ஆண்டுக்கான விருது பல்வேறு சமூகப்பணிகளிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தொண்டாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா.கண்ணகிக்கு வழங்கப்படுகிறது.

தகன மேடைகளில் சடலங்களை எரிக்கும் பணி ஆண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அந்த எண்ணத்தை உடைத்தெறிந்து பெண்களாலும் அப்பணியை மேற் கொள்ள இயலும் என்பதை கண்ணகி நிரூபித்துக் காட்டி வருகிறார். திருவண்ணாமலை நக ராட்சியில் எரிவாயுத் தகன மேடை பொறுப்பாளராகப் பணியாற்றி வரும் கண்ணகி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி இறுதிச் சடங்கை மேற்கொண்டுள்ளார்.