தூத்துக்குடி: பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தனது பெண் நண்பரை திருமணம் செய்துகொள்ள பாதுகாப்பு வழங்கவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் பெண்கள் பொன்மாரி (25), ஸ்வீட்லி(22). இருவரும் ஒன்றாக வேலை செய்தபோது பழகினர். இந்நிலையில் பொன்மாரி ஆணாக மாறி ஸ்வீட்லியின் விருப்பத்துடன் அவரைத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்கு ஸ்வீட்லியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 10 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி மதுரை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் தஞ்சம் அடைந்தனர்.
நேற்று பொன்மாரி, ஸ்வீட்லி இருவரும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்துவாழ உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து ஸ்வீட்லி கூறும் போது, "நானும் பொன்மாரியும் தாதியர் படிப்பை முடித்து, தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்றி வந்தோம். கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து வாழ எங்களை அனுமதிக்க வேண்டும்," என்றார்.

