தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாசா விண்வெளி மாநாட்டில் திருச்சி காயத்ரி பங்கெடுப்பு

1 mins read
23f83aa8-59f5-4f71-8a34-920faa37c938
திருச்சி சமயபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படித்துவரும் மாணவி காயத்ரி, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல தோ்வாகி உள்ளாா். படம்: ஊடகம் -

திருச்சி: திருச்சி சமயபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படித்துவரும் மாணவி காயத்ரி, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல தோ்வாகி உள்ளாா்.

வரும் ஜூன் மாதம் நாசாவில் நடக்கும் உலகளாவிய விண்வெளி அறிவியல் மாநாட்டில் இவர் பங்கேற்கிறார்.

'ஆஸ்ட்ரோ நெட் மற்றும் கோ 4 குரு' ஆகிய நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் இணையம் மூலம் நடத்திய தகுதித் தோ்வில் சிறந்த திறனாளராகத் தேர்வாகி உள்ள காயத்ரிக்குப் போதிய வசதி இல்லாத நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட நல பணிக்குழு நிதியில் இருந்து 75,000 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.

நாசா செல்ல 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் நிதியுதவி கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கடந்த 26ஆம் தேதி இவர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

நாசாவில் நடக்கும் அனைத்துலக அளவிலான விண்வெளி அறிவியல் தோ்விலும் காயத்ரி பங்கேற்கிறாா்.

இத்தோ்வில் தேர்ச்சி பெற்றால், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விண்வெளித் துறைசார்ந்த பட்ட மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பை காயத்ரி பெறுவார் என்று தெரிகிறது.

இதற்கான கல்விக் கட்டணம் முழுவதையும் நாசா விண்வெளி ஆய்வு மையமே ஏற்றுக்கொள்ளும்.