பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக வாணவெடிகளைத் தயாரித்து பண்டிகைக் காலங்களில் விற்பனை செய்து வந்த ஒரு பெண்மணி நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் மாண்டுபோனார்.
பாண்டியம்மாள் என்ற அந்த மாதின் புதல்வியான நிவேதா என்பவரும் மாண்டார். தகவல் அறிந்து உடனே அந்த வீட்டிற்கு விரைந்த பெரியகுளம் போலிசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த வீடு, சட்டவிரோதமாக வாண வெடிகளைத் தயாரிக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறினார்கள்.

