முதல்வர் திட்டவட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது

முதல்வர் திட்டவட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது

1 mins read

சென்னை: விவசாயத்தைப் பாதிக்கும் எந்தவித புதிய எரிவாயுத் (ஹைட்ரோ கார்பன்) திட்டத்துக்கும் தமிழகத்தில் அனுமதி கிடைக்காது என்றும் எரிவாயுத் திட்டம் இனி தமிழகத்தில் செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அவர், காவேரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டினார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவற்றை முழுமையாக ஒழிக்க மக்கள், வியாபாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப் பணிகள் ெதாடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.