தென்காசி: தென்காசியில் அகரம் என்ற ஊர் பகுதியில் பறவைக் காய்ச்சல் அச்சம் தலை விரித்து ஆடுகிறது. அந்தப் பகுதியில் ஓடும் சிற்றாறு என்ற ஆற்றில் ஏராளமான வாத்துகள் செத்து மிதந்ததே இதற்குக் காரணம்.
இறந்த வாத்துகளின் உடல்களை ஆற்றில் யாரோ போட்டு இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆற்றைத் தூய்மைப் படுத்தும் பணி மும்முரமாக நடக்கிறது.