சென்னை: ஐ.டி. நிறுவனங்களில் வேலையிழந்த இளைஞர்களைக் குறிவைத்து, போலியாக கால் சென்டர் நிறுவனத்தை நடத்தி அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய நால்வர் போலிஸ் பிடியில் சிக்கினர்.
பணத்தை ஏமாந்தோரில் 400க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் தொடர்பில் போலி சார் நடத்திய விசாரணையில் அந்த மோசடிக் கும்பல் ஒரு பெரிய கும்பலை அமைத்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்தது தெரியவந்தது.
மக்களுடன் மக்களாக ஏமாந்து போனோரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் நீதிபதி களும் அடங்குவர்.
வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாகவும் வேலை வாங்கித் தருவதாகவும் கவர்ச்சியாகப் பேசி இந்தக் கும்பல் பொது மக்களிடம் இருந்து பணத்தை பறித்துள்ளது.
இந்த மோசடி குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் வேலை இல்லாத் திண்டாட்டத்தை பயன்படுத்தி படித்த அப்பாவி இளை ஞர்களை ஒரு மோசடிக் கும்பல் தங்களது மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர். இந்த இளைஞர்கள் ஐ.டி.நிறுவனங்கள், கைபேசி நிறுவனங் கள், நிதி நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து பின்னர் வேலையை இழந்த வர்கள் ஆவர்.
"மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர் கள் இந்த இளைஞர்களைத் தங்க ளது போலியான கால் சென்டர்களில் வேலைக்குச் சேர்த்துள்ளனர்.
"இந்த இளைஞர்கள் பொது மக்களின் கைபேசி எண்களைச் சேகரித்து அவர்களிடம் போனில் பேசுவார்கள். குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கித் தருவதாக இவர்கள் சொல்வார்கள். இவர் களின் இனிப்பான பேச்சுக்கு மயங்கி வங்கியில் கடன் வாங்க ஆசைப்படுபவர்களிடம் அவர்களின் ஆதார் எண், வங்கி ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண், வங்கிக் கணக்கு விவரம், பான் கார்டு விவரம் போன்றவற்றை சேகரித்து அதன் மூலம் மோசடி வலையை வீசுவர்.
"பின்னர் வங்கிக் கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் முதலில் முன்பணம் கட்ட வேண்டும் என்று இவர்கள் சொல்லுவார்கள். அந்த முன்பணத்தை தங்களது வங்கிக்கணக்கில் போடச் சொல்லி அந்த பணத்தை சுருட்டுவார்கள்.
"பின்னர் அவர்களது ஓ.டி.பி. எண்ணை வாங்கி, அதன் மூலம், அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் ஆன்லைன் மூலம் எடுத்து ஏப்பம் போட்டு விடுவார்கள். இது ஒருவகையான மோசடி.
"இந்த கும்பலைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உள்பட மேலும் சிலரை கைது செய்ய தேடி வருகிறோம்," என்று அந்த அதிகாரி கூறினார்.

