முதல்வர்: மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டுகின்றன

முதல்வர்: மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டுகின்றன

2 mins read
ebf2aa07-66e5-417f-98ae-686d7e49809c
கட்சியையும் அதில் நீங்கள் வகிக்கும் தலைமைப் பொறுப்புகளையும் மறந்து மக்களோடு மக்களாக ஒன்றாக பேசுங்கள், பழகுங்கள் என்று  அதிமுக நிர்வாகிகளுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.  படம்: ஊடகம் -

சென்னை: 'என்­பி­ஆர்' என்று சுருக்­க­மா­கக் குறிப்­பி­டப்­படும் தேசிய மக்­கள்­தொகை பதி­வேடு விவ­கா­ரத்­தில் இஸ்­லா­மிய மக்­களை எதிர்க்­கட்­சி­கள் தூண்டி விடு­கின்­றன என்று தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

தமி­ழக சட்­ட­சபை நேற்று கூடி­ய­போது தேசிய மக்­கள் தொகை பதி­வேட்டுக்கு எதி­ராக தீர்­மா­னம் நிறை­வேற்­றக் கோரி எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

இதற்கு சபா­நா­ய­கர் தன­பால் கண்­ட­னம் தெரி­வித்­தார். திமுக உறுப்­பி­னர்­க­ளின் கோரிக்­கையை விவா­திக்க சபா­நா­ய­கர் அனு­மதி தர­வில்லை. இத­னால் சிறிது நேரம் சல­ச­லப்பு ஏற்­பட்­டது.

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் திமுக தலை­வ­ரு­மான மு.க.ஸ்டா­லின் பேசி­ய­போது, தமி­ழ­கத்­தில் தேசிய மக்­கள் தொகை பதி­வேடு பணி­கள் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டதை சட்டப்­ பே­ர­வை­யில் தீர்­மா­ன­மாக நிறை­வேற்ற வேண்­டும் என்று கூறி­னார்.

இதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர் உத­ய­கு­மார், 'என்­பி­ஆர்' நிறுத்­தி­வைப்பு என்­பது புதிய அறி­விப்பு இல்லை, பேர­வை­யில் கூறி­ய­தையே செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லும் தெரி­வித்­தேன். இதில் உரிமை மீறல் எது­வும் இல்லை என்றார்.

இதன் பிறகு பேசிய முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, "என்­பி­ஆர் விவ­கா­ரத்­தில் எதிர்க்­கட்­சி­கள் இஸ்­லா­மிய மக்­களைத் தூண்டி விடு­கின்­றன. சிறு­பான்­மை­யின மக்­கள் மத்­தி­யில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி கொண்­டி­ருக்­கி­றீர்­கள். உண்­மை­களை மக்­க­ளுக்கு எடுத்­துச் சொல்ல வேண்­டும். பதற்­ற­மான சூழலை உரு­வாக்க வேண்­டாம்," என கேட்டுக் கொண்டார்.

அதன் பின்­னர் பேசிய அமைச்­சர் ஆர்.பி.உத­ய­கு­மார், தமி­ழ­கத்­தில் என்­பி­ஆர் பணி­கள் தொடங்­கப்­ப­ட­வில்லை என அறி­வித்­தார்.

நேற்று முன்­தி­னம் சட்­ட­ச­பைக்கு வெளியே செய்­தி­யா­ளர்­க­ளி­டம் என்­பி­ஆர் பணி­கள் தொடங்­கப்­ப­ட­வில்லை என்று கூறிய அமைச்­சர் மீண்­டும் இதனை பேர­வை­யிலும் வலியுறுத்தியுள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்து உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.