தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

1 mins read
54546938-96f3-447e-9ac4-a955ba7339a0
-

சென்னை: சென்­னை­யில் நேற்று ஆப­ர­ணத் தங்­கத்­தின் விலை சவ­ர­னுக்கு ரூ.1.096 குறைந்து ரூ.32,160க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.

கொரோனா கிருமியின் தாக்­கம், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு உள்­பட பல்­வேறு கார­ணங்­க­ளால் தங்­கத்­தின் விலை பிப்­ர­வரி 18 முதல் உயா்ந்து நாள்­தோ­றும் புதிய உச்­சத்­தைத் தொட்­டது.

இதன்­பி­றகு, தங்­கத்­தின் விலை ஏற்ற இறக்­க­மாக இருந்து வந்த நிலை­யில், கடந்த மாா்ச் 6ஆம் தேதி வர­லாறு காணாத வகை­யில் மீண்­டும் உயா்ந்து, பெரிய உச்­சத்­தைத் தொட்­டது.

இதன்­பி­றகு, தங்­கம் விலை சற்று குறைந்து வந்­தது.

இந்த நிலை­யில் சென்­னை­யில் நேற்று 22 கிராம் ஆப­ர­ணத்­தங்­கம் சவ­ர­னுக்கு ரூ.1,096 குறைந்து ரூ.32,160க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. ஒரு கிரா­முக்கு ரூ.137 குறைந்து ரூ.4,020க்கு விற்­ப­னை­யா­னது. வெள்ளி விலை­யும் சற்று குறைந்­துள்­ளது. வெள்ளி கிரா­முக்கு முப்பது காசு­கள் குறைந்து ரூ.45.90 ஆக விற்­கப்­பட்­டது.