ஓசூரில் ரூ.635 கோடி செலவில் தொழிற்சாலை

ஓசூரில் ரூ.635 கோடி செலவில் தொழிற்சாலை

1 mins read
6faaebc8-5ce0-449c-ab5c-160b7db7af4e
-

சென்னை: ஓசூ­ரில் ரூ. 635 கோடி மதிப்­பில் மின்­சா­ரத்­தில் இயங்­கும் 'பைக்' தொழிற்­சாலை தொடங்­கப் பட­வுள்­ளது,

இதன் மூலம் 4,300 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என்று நேற்று சட்­ட­ச­பை­யில் பேசிய அமைச்­சர் எம். சி. சம்­பத் தெரி­வித்­தார்.

ஓசூர் தொகுதி எம்­எல்ஏ சத்யா, தனது தொகு­தி­யின் தொழில் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்­பி­னார்.

இதற்­குப் பதி­ல­ளித்து அமைச்­சர் சம்­பத் பேசி­னார்.

"எலக்ட்­ரிக் பைக் நிறு­வ­னம் ஒன்று, ஓசூ­ரில் ரூ. 635 கோடி முத­லீட்­டில் தொடங்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த நிறு­வ­னம், பெங்­க­ளூரை சேர்ந்­தது.

"கடந்த 2019ஆம் ஆண்­டில் நடை­பெற்ற உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில், இதற்­கான புரிந்­து­ணர்வு செய்­யப்பட்­டது. இந்த தொழிற்­சாலை அமை­வ­தன் மூலம் 4,300 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும்," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"சென்­னைக்கு அடுத்­த­ப­டி­யாக ஓசூர் நக­ரில் தொழில் தொடங்க அதி­க முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்படு­கிறது.

இதை அறிந்­து­தான் முத­லீட்­டா­ளர்­க­ளிடம் அரசு அர­வ­ணைப்­பு­டன் செயல்­ப­டு­கிறது.

"ஓசூர் நக­ரில் செயல்­படும் சிப்­காட்-2 கேம்­ப­சில், கடந்த ஓராண்­டில் மட்­டும் ரூ. 250 கோடி மதிப்­பீட்­டில் 5 புதிய நிறு­வ­னங்­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.

"ஆட்டோ மொபைல் துறை வளர்ச்­சி­யில் இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கம் முத­லி­டத்­தில் உள்­ளது.

"தமி­ழ­கத்­தில் 4,000 ஏக்­கர் பரப்­ப­ள­வில் 'பி6' இயந்­தி­ரங்­கள் தயா­ரிக்­கக்­கூ­டிய வகை­யில் 'எலக்ட்­ரிக் பூங்கா' அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது," என்­றும் அமைச்­சர் எம்.சி.சம்­பத் தெரி­வித்­தார்.