சென்னை: "தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
"அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள், தமிழில் எழுதப்படுவது கட்டாயம் என்ற அரசாணை தீவிரமாக செயல்படுத்தப்படும்," என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் "தமிழில் பெயர் பலகை எழுதாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
"நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாய் அபராதம் என்ற பழைய அணுகுமுறை நீடித்தால் அனைத்து பெயர் பலகைகளிலும் தமிழ் மணக்கும் என்பது கனவாகிவிடும். கடுமையாக அபராதங்கள் விதிக்கப்பட்டால்தான் பெயர் பலகைகளை, தமிழ் மொழிக்கு மாற்றும் அரசின் நோக்கம் நிறைவேறும்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.