கப்பல் கப்பலாக வரும் மணல்

கப்பல் கப்பலாக வரும் மணல்

2 mins read
e3e066e8-78c8-4f0d-853f-7f2880a2322a
படம்: இணையம் -

சென்னை: தமிழ்­நாட்­டில் கட்­டு­மானப் பணிக்­குத் தேவைப்­படும் ஆற்று மணல் போதிய அள­வுக்குக் கிடைக்­கா­மல் பெரிய அள­வில் தட்­டுப்­பாடு நில­வு­கிறது. அந்­தப் பற்றாக்கு­றை­யைப் போக்க வெளி­நாடு­களில் இருந்து குறிப்­பாக மலே­சி­யா­வில் இருந்து தொடர்ந்து மணலை தமி­ழக அரசு இறக்­கு­மதி செய்து வரு­கிறது.

இது­வ­ரை­யில் 4 லட்­சம் மெட்­ரிக் டன் வெளி­நாட்டு மணல் தமி­ழ­கம் வந்­துள்­ளது. இந்நிலை­யில், மலே­சி­யா­வில் இருந்து 50,000 டன் மணலை ஏற்­றிக்­கொண்டு 10வது கப்­பல் தமி­ழ­கத்தை நோக்கி வந்து­கொண்டு இருப்­ப­தாக அதி­கா­ரி­களை மேற்­கோள் காட்டி ஊட­கங்­கள் தெரி­வித்து இருக்­கின்­றன.

தமிழ்­நாட்­டில் அன்­றா­டம் 15,000 லாரி மணல் தேவைப்­ப­டு­வ­தாக மதிப்­பி­டப்­ப­டு­கிறது. முன்பு போல் ஆற்று மணல் மாநி­லத்­தில் கிடைப்­ப­தில்லை.

தஞ்சை, திருச்சி, விழுப்­பு­ரம் மாவட்­டங்­களில் பல இடங்­க­ளி­லும் மணலை எடுக்க நீதி­மன்­றம் தடை விதித்து இருக்­கிறது. இது தொடர்­பான வழக்­கு­கள் எல்­லாம் நிலு­வை­யில் இருந்து வரு­கின்­றன.

இந்த நிலை­யில், திருச்சி, தஞ்சை, நாகப்­பட்­டி­னம், வேலூர், நாமக்­கல் ஆகிய மாவட்­டங்­களில் 15 மணல் படு­கை­கள் மட்­டுமே இயங்கி வரு­கின்­றன. அவற்­றில் இருந்து அன்­றா­டம் 1,500 லாரி மணல் ஏற்­றப்­ப­டு­கிறது. ஒரு லாரி­யில் 2 யூனிட் மண் நிரப்­பப்­படும். அதன் விலை ரூ. 1,330 என்று அர­சாங்­கம் நிர்­ண­யித்து விற்று வருகிறது.

ஆனால் அது போல பல மடங்கு பணம் கொடுத்­தா­லும் மணல் கிடைப்­ப­தில்லை என்று பர­வ­லா­கப் புகார் தெரி­விக்­கப்­ப­டு­கிறது. ஆற்று மண­லுக்­குப் பதி­லாக அண்­மைய காலத்­தில் கல்மணல் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கிறது.

தமி­ழக அரசு அங்­கீ­கா­ரம் பெற்ற 216 கல்மணல் ஆலை­களில் இருந்து அன்­றா­டம் 15,000 லாரி கல்மணல் உற்­பத்தி ஆகிறது. இது ஒரு யூனிட் ரூ. 5,000 வரை விற்­கப்­ப­டு­கிறது.

மாநி­லத்­தின் மணல் பற்­றாக்­ குறை­யைப் போக்க 2018 அக்­டோ­பர் முதல் வெளி­நாட்டு மணல் இறக்­கு­மதி ஆகிறது. இது­வ­ரை­யில் ஒன்­பது கப்­பல்­களில் சுமார் 400,000 மெட்­ரிக் டன் மணல் வந்­தி­ருக்­கிறது.

அன்­றா­டம் 1,500 லாரி ஆற்று மண­லும் 15,000 லாரி கல்மண­லும் 200 லாரி இறக்­கு­மதி மண­லும் விற்­ப­னைக்­குக் கிடைப்­ப­தால் தமிழகத்தில் இப்போது தேவைக்கு அதி­க­மா­கவே மணல் இருக்­கிறது என்று அதி­கா­ரி­கள் கூறு­கி­றார்­கள்.

ஆனால் நடை­மு­றை­யில் வேறு வித­மாக இருக்­கிறது என்று கட்டு­மா­னத் துறை­யி­னர் கவலை தெரி­விக்­கி­றார்­கள்.

தமிழ்­நாட்­டில் இணை­யம் மூலம் மணல் விற்­கப்­ப­டு­கிறது. மணல் பற்­றாக்­குறை கார­ண­மாக கட்­டு­மா­னப் பணி­கள் அதி­க­ளவு குறைந்து­விட்­டன. ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் வேலை இழந்து இருக்­கி­றார்­கள்.

சட்­ட­வி­ரோ­த­மாக ஆற்று மணல் எடுக்­கப்­ப­டு­வ­தை­யும் விற்­கப்­ப­டு­வ­தை­யும் தடுக்க 24 மணி நேரம் கடுமையான நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறுகிறார்கள்.