திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியைக் கட்டுவதற்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் நேற்று அடிக்கல் நாட்டினர்.
அந்தக் கல்லூரி 8.61 ஹெக்டர் பரப்பளவில் அமையும் என்றும் ஓராண்டில் அது கட்டி முடிக்கப்படும் என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முதல்வர் நேற்று இதர பல திட்டங்களைத் தொடங்கி வைத்து பல கட்டடங்களைத் திறந்துவைத்தார்.

