மின்சாரப் பயனீட்டாளர்கள் மூன்று கோடி பேர்

மின்சாரப் பயனீட்டாளர்கள் மூன்று கோடி பேர்

1 mins read

சென்னை: தமிழகத்தில், மொத்த மின் பயனீட்டாளர் எண்ணிக்கை, ஜனவரி நிலவரப்படி 3 கோடியைத் தாண்டி உள்ளதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட எரிசக்தி துறை கொள்கை விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது.

வாகனத் தயாரிப்பு போன்ற பெரிய தொழிற்சாலைகளை உள்ளடக்கிய உயரழுத்த பிரிவில் 10,229 மின் நுகர்வோர்கள் உள்ளனர். தாழ்வழுத்த பிரிவில் 2.12 கோடி வீட்டு நுகர்வோர்கள் உள்ளனர் என்று அது குறிப்பிடுகிறது.

36.44 லட்சம் வணிகம்; 7.47 லட்சம் சிறு தொழிற் சாலைகள்; 21.40 லட்சம் விவசாயம்; 11.20 லட்சம் குடிசை வீடுகள்; 14.17 லட்சம் வழிபாட்டு தலங்கள் என மொத்தம் 3.03 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.