திருமணப் பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து வியாபாரியைக் கொன்றது கும்பல்

திருமணப் பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து வியாபாரியைக் கொன்றது கும்பல்

2 mins read

கும்­ப­கோ­ணம்: கும்­ப­கோ­ணத்­தில் தங்க நகை­கள், பணத்­தைக் கொடுத்து மனை­வியை காப்­பாற்­றிய நகை வியா­பாரி ஒரு­வர் தன்­னு­யிரை இழந்­துள்­ளார்.

நகை வியா­பாரி ஒரு­வரை ஞாயிறு இரவு சந்­தித்து திரு­ம­ணப் பத்­தி­ரிகை கொடுக்­க­வேண்­டும் என்று பொய் பேசிய கும்­பல், அந்த வியா­பா­ரியை இரும்­புக்கம்­பி­யால் தாக்­கிக்­கொன்­றது.

அதன்­பின்­னர் வியா­பாரி வைத்­தி­ருந்த நகை பணத்­தை­யும் கொள்­ளை­ய­டித்­துக் கொண்டு தப்­பி­யோ­டிய கும்­பலை போலி­சார் வலை­வீசி தேடி வரு­கின்­ற­னர்.

கும்­ப­கோ­ணம், மேலக்­கா­வே­ரி­யைச் சேர்ந்­த­வர் ராம­நா­தன், 63. இவர் அங்­குள்ள சண்­மு­கம் தெரு­வில் சமை­யல் எண்­ணெய் மொத்த வியா­பா­ரம் செய்து வந்­தார்.

வீட்­டில் ஞாயிறு இரவு ராம நாத­னும் அவ­ரது மனைவி விஜ­யா­வும் ெதாலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது திரு­ம­ணப் பத்­தி­ரிகை கொடுப்­ப­தா­கக் கூறி வீட்­டுக்­குள் அடை­யா­ளம் தெரி­யாத இரு­வர் வந்­த­னர். அவர்­க­ளைத் தொடர்ந்து மேலும் மூவர் வீட்­டுக்­குள் நுழைந்­த­னர்.

இதை­ய­டுத்து ஐவ­ரும் ராம நாத­னைத் தாக்கி நகை, பணத்­தைத் தரும்­படி கேட்­டுள்­ள­னர். அவற்றை ராம­நா­தன் கொடுக்க மறுக்­கவே அவ­ரது மனைவி விஜ­யாவை ஓர் அறை­யில் தள்ளி பூட்­டி­னர்.

அப்­போது ராம­நா­தன் தனது மனை­வியை எது­வும் செய்­ய­வேண்­டாம் என கெஞ்சி உள்­ளார்.

"பணம் கொடுத்­தால் உனது மனை­வியை விட்­டு­வி­டு­கி­றோம்," என்று அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இத­னால் வீட்­டில் இருந்த பணம், நகை­களை எடுத்து வந்து ராம­நா­தன் அந்த கும்­ப­லி­டம் கொடுத்­துள்­ளார்.

நகை, பணத்தை வாங்­கிக் கொண்ட அந்த ஆட­வர்­கள் "உன்­னைக் கொல்­லா­மல் விட்­டால் போலி­சா­ரி­டம் எங்­க­ளைக் காட்­டிக் கொடுத்­து­வி­டு­வாய்," எனக் கூறி அவர்­கள் மறைத்து வைத்­தி­ருந்த கூர்­மை­யான இரும்­புக் கம்­பி­யால் ராம­நா­தனை தாக்­கி­யுள்­ள­னர். இதில் அவர் அந்த இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார்.

அறை­யி­லி­ருந்து வெளியே வந்த விஜயா, தனது கண­வர் இறந்து கிடப்­ப­தைப் பார்த்து அரண்டு அழு­தார். அக்­கம்­பக்­கத்­தி­னர் இச்­சம்­ப­வம் குறித்து காவல்­து­றைக்கு தக­வல் தெரி­வித்­த­னர்.

போலி­சார் சம்­பவ இடத்­துக்கு வந்து விசா­ரணை நடத்­தி­னர். மோப்­ப­நாய்­களும் சம்­பவ இடத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டன. கொலை நடந்த வீட்­டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்­றன மோப்ப நாய்­கள். அவை யாரை­யும் கவ்­விப்­பி­டிக்­க­வில்லை. போலி­சா­ரின் விசா­ரணை தொடர்­கிறது.