சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த எம்எல்ஏக்கள் நேற்று தங்கள் உடல்நலத்தை பரிசோதனை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கை களும் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த அனைத்து எம்எல்ஏக் களுக்கும் கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. சோதனைக்குப் பிறகே எம்எல்எக்கள் சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சட்டசபை ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இக்கிருமி யால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அவருக்கு தற்போது நோய் குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.

